Sri Lankan Tamil Ethnic Crisis – A Feasible Solution
தற்போது உள்ள நிலையில் இலங்கை தமிழர்களுக்கு எந்த வகையில் ஒரு நல்ல தீர்வு அளிக்க முடியும்? உலகெங்கிருந்தும் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கை அதிபர் ராஜபக்ஷே மீது போர் குற்றம் சுமத்தி அவரை விசாரிக்க வலியுறித்தியும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தமிழக சட்டமன்றத்தில் கூட இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்ககோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே மீது போர் குற்றம் சுமத்தி அவரை விசாரிக்க கோருவதில் தவரேதும் இல்லை. ஆனால் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிப்பது ஒரு சரியான தீர்வல்ல. ஏனெனில், அப்படி ஒரு தடையை ஐக்கிய நாடு சபையும் , உலக நாடுகலும் விதித்தால் அதனால் அதிகம் பாதிப்படைய போவது வீடிழந்து, சொந்தங்களை இழந்து மற்றும் அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து நிற்கும் தமிழ் மக்கள்தான்.
பொருளாதார தடை ஒரு சிறந்த தீர்வாக என்றுமே இருந்ததில்லை. பொருளாதார தடை விதிக்கப்பட்ட பர்மா, கியூபா, நார்த் கொரியா, ஈராக், ஈரான் நாடுகளில் அதிகம் பாதிக்கப்பட்டது அங்கே இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள்தான். ஆளும் வர்க்கத்திற்கு மிக குறைவான பாதிப்பே ஏறபட்டது.
1990-ஆம் ஆண்டு நிகழ்ந்த வளைகுடா போருக்கு பின் ஈராக் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளால் பொது மக்கள் அளவில்லாத துயருக்கு உள்ளானார்கள். 1989 ஆம் வருடத்தில் அந்த நாட்டில் தனி நபர் வருமானம் ஆண்டிற்கு $3510 ஆக இருந்தது. அது 1996-ஆம் வருடம் $450 ஆக குறைந்தது. அது மட்டுமில்லாமல் குழந்தை தொழிலாளர்களே இல்லாமல் இருந்த நாட்டில் பொருளாதார தடை விதிக்கப்பட்டபின், பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியை நிறுத்தி அவர்களை வேலைக்கு அனுப்பிய கொடுமையும் நிகழந்தது.
பொருளாதார தடை அமலில் இருந்த காலகட்டத்தில், இராக்கில் ஒரு ஆய்வின்படி சுமார் இரண்டு லட்சத்து இருவத்து ஏழாயிரம் குழந்தைகள் சரியான உணவு மற்றும் மருத்துவ வசதி மறுக்கப்பட்டதினால் இறந்துள்ளனர். UNICEF போர், வறுமை மற்றும் மருத்துவ வசதியில்லாததால் ஐந்து லட்சத்திற்கும் மேல் குழந்தை இறப்பு இருந்திருக்கும் என்று கணக்கிடுகிறது. கல்வி வளர்ச்சியும் மிகப் பெரிய அளவில் அந்த கால கட்டத்தில் குறைந்தது. உண்மையில் போர் ஏற்படுத்திய இழப்புகளைவிட பொருளாதார தடைகளால் அப்பாவி பொது மக்கள் அதிகம் அவதிப்பட்டுள்ளனர்.
பொருளாதாரத்தில் மிக முன்னேறிய நாடான இராக்கிலேயே இந்த நிலை என்றால் பொருளாதார தடை விதிக்கப்பட்டால் அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து நிற்கும் இலங்கை தமிழர்களின் நிலை என்னவாகும் என்று என்னவே மனது அஞ்சுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், இப்போது ஏதோ பேச்சுக்கு நடக்கும் தமிழர் புனர்வாழ்வு பணிகளையும் இலங்கை அரசு முற்றிலுமாக நிறுத்திவிடும். தமிழர்கள் அகதி முகாம்களில் ஆடு மாடு போன்று அடைக்கப்பட்டு பட்டினியாலும் வியாதிகளாலும் ஒரு சில வருடங்களிலேயே முழுவதுமாக அழிக்கப்பட்டுவிடுவார்கள்.
பொருளாதார தடை கோரும் தீர்மானங்களால் நம்மூர் அரசியல்வாதிகள் ஏதோ மிகப் பெரிய சாதனை செய்துவிட்டது போன்று அவர்கள் ஆதரவாளர்களால் போற்றப்பட்டாலும் அதனால் ஏற்படும் இழப்புகள் பாதிக்கபட்ட மக்களுக்கு போரை விட பல மடங்கு இருக்கும் என்பதே உண்மை. உண்மையில் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு இலங்கை தமிழர்கள் மேல் அக்கறை இருக்குமானால் அவர்கள் முதலில் செய்ய வேண்டியது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்று தருவதுதான். இலங்கை தமிழர்கள் இந்தியாவில் தங்கள் சொந்த நாட்டை போல வாழ, கல்வி கற்க, தொழில் செய்ய இது உதவும். மத்திய அரசு மனது வைத்தால் இது நடக்கும். அல்லது, தற்போது நடைமுறையில் இருக்கும் Overseas Citizenship of India என்ற வசதியை அனைத்து இலங்கை தமிழர்களுக்கும் அளிக்க வேண்டும். இதனால் அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளை விசா போன்ற எந்த இடர்ப்பாடும் இல்லாமல் பெறமுடியும். இந்த வசதி இலங்கை தமிழர்களின் முன்னோர்கள் எந்த நூற்றாண்டில் இலங்கைக்கு குடிபெயர்ந்திருந்தாலும் அளிக்கப்படவேண்டும்.
இது போன்று ஏதாவது செய்தால்தான் பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட ஒரு இனத்திற்கு ஒரு விடிவு கிடைக்கும். இலங்கையில் அவர்கள் அனைத்து உரிமையும் ஒரு நாள் பெறுவார்கள் என்பது வெறும் பகல் கனவு. நம் தொப்புள்கொடி உறவுகளை காப்பாற்ற, ஆதரிக்க நமக்கு முழு கடமையும் உள்ளது. ஆனால் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி உள்ளவரை இதுபோன்று எதுவும் நிகழ்வதற்க்கு வாய்ப்பே இல்லை. ஒரு வேலை மூன்றாவது அணியோ அல்லது பிஜேபியோ மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை வந்தால், உண்மையான தமிழ் ஆர்வலர்கள் முயற்சி செய்தால் இது நடக்க சிறிதளவு வாய்ப்புண்டு. அதுவரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்ககோரும் தீர்மானங்கள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வருவதற்கு மட்டுமே உதவும். அல்லது சீமான் போன்ற pseudo தமிழினவாதிகள் அம்மாவை புகழ்ந்து பேச கிடைக்கும் ஒரு வாய்ப்பாகவே இருக்கும்,

